Immediate Press Release    1/6/2012

அம்பிகாவின் மீது தாக்குதலுக்கு ம.இ.கா கண்டனமாமெர்லிமாவ் ம.இ.கா வின் செயல் எதை குறிக்கிறது – சார்ல்ஸ் கேள்வி

டத்தோ அம்பிகா வீட்டின் முன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ம.இ.கா கண்டனம் தெரிவித்துள்ளது என  மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அப்படியானால், மெர்லிமாவ் ம.இ.கா வினரின் செயல் எதை குறிக்கின்றது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

டத்தோ அம்பிகாவின் மீது போலிஸ் புகாரும், அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தை மீட்க சொன்ன மெர்லிமாவ் ம.இ.கா வின் மனித அடிப்படை உரிமை அத்துமீறும் செயல் குறித்து டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் என்ன சொல்ல போகிறார்?

இனவாதம் அடிப்படையிலான தாக்குதல் இது இல்லையென என்று இவர் கூறினாலும் , உண்மை நிலவரங்கள் அதற்கு மாறாகவே சித்தரிக்கின்றன என கூறிய சார்ல்ஸ் ஏன்  பெர்சே அமைப்பின் இன்னொரு இணைத் தலைவரான பாக் சமாட் என அழைக்கப்படும் ஏ சமாட் சைட் மீது எந்த தாக்குதல்களும் நடத்தப் படவில்லை என மேலும் கேள்வி தொடுத்தார்.

டத்தோ அம்பிகாவின் மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலுக்கு ம.இ.கா கண்டனம் தெரிவிப்பது உண்மையானால்,  அவருக்கு எதிராக செய்யப்பட போலிஸ் புகாரை மெர்லிமாவ் ம.இ.கா உடனடி மீட்டுக் கொள்ளும் படி  டாக்டர் சுப்ரமணியம் உத்தரவிடத் தயாரா என சார்ல்ஸ் சவால் விடுகையில், அதே வேளையில் அவரின் குடியுரிமையையும் பட்டங்களையும் பறிக்க சொன்னதற்காக மன்னிப்பு  கேட்கும் படி வலியுறுத்தி கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.

மூலம் :- மக்கள் ஓசை

 

  • மூலம் :- செம்பருத்தி
  • Tuesday, December 20, 2011 11:15 pm

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியர்கள் பலருக்கு துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

கடந்த வெள்ளிகிழமை  சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேலும் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவரும் மனிதவளத் துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரமணியமும்  பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

ஆனால் ‘இண்டேர்லோக் நாவல் உண்மையிலே மீட்கப்பட்டதா; இல்லையா? என்பது குறித்து கல்வியமைச்சர் மொகதீன் யாசின் அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்க வேண்டும்’ என முகமட் ஃபுவாட் கூறியிருப்பது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் மீண்டும் அவமானப்படுத்தும் செயல் என கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

அப்படியானால், ஆளங்கட்சியிலிருந்துகொண்டு இந்திய சமூதாயத்தின் தலைவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் மஇகா தலைவர்களின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லையா? இந்தியர்களின் பிரதிநிதிகளின் முடிவுக்கு அரசாங்கம் மதிப்பளிக்காதா? என அவர் வினவினார்.

ஆரம்பத்தில் இண்டர்லோக் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே அந்நாவலை அரசாங்கம் மீட்டுக்கொண்டிருக்கவேண்டும். தாமதம் செய்தற்குக் காரணமே இல்லை. அந்த நாவலில் கூறப்பட்டுள்ள விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பிரச்னை எழுப்பப்பட்டதும் அது பள்ளிக்கூடப் பாடப் புத்தகத் திட்டத்திருந்து உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

ஆனால், தற்போது மீட்டுக் கொள்ளப்படும் எனக் கூறுவதும் பின்பு, துணைத் தலைமையமைச்சரின் அறிவிப்பிற்கு காத்திருக்க வேண்டும் என்பதும், மத்திய அரசாங்கத்தின் அரசியல் நாடகமே என்பதனை மக்கள் புரிந்து கொண்டு, வரும் பொதுத் தேர்தலில் தீர்க்க முடிவு எடுக்குமாறும் சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார்.

3 Aug | செய்தி| மலேசியாஇன்று

மலேசியாவில் பல பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமலும், வகுப்பறை பற்றாக்குறையினாலும், நிலப் பிரச்சனையாலும் அவதிப்படுகின்றன.
இதில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ் பள்ளியும் ஒன்றாகும். இண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலக்கூடிய இப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லை என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 

இந்தப் பள்ளி விவகாரத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பல முறை கேள்வி எழுப்பியுள்ளேன். இவ்விவகாரத்திற்காக வட்ட மேசை கலந்துரையாடல் நடத்தி காலம் இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதிலும், கூட்டரசு அரசாங்கம் பள்ளி கட்டுமானத்திற்கு உதவ முன் வருவாதாக எந்த அறிகுறியும் இல்லை. நமது இந்திய தலைவர்களிடமும் இதை எடுத்துரைத்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்றாரவர்.
 

“இது ஒரு புறமிருக்க, இந்தியர்களாகப் பிறந்து தாய் மொழியை கற்க ஏங்கும் நமது இளைய சந்ததியினருக்கு உதவும் வகையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிலம் ஒதுக்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டது. ஆயினும் அப்பள்ளியின் கட்டுமான செலவுகளை ஈடுக்கட்டமுடியாமல் தவிக்கும் அப்பள்ளிக்கு கூட்டரசு அரசாங்கமும் மஇகாவும் எந்த வகையில் உதவி செய்ய தயாராக உள்ளன”, எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
 

முழு அமைச்சரானதும் தமது மஇக கட்சியை தற்காத்துக் கொள்ள குரல் எழுப்பிய ஜி.பழனிவேல், இனியும் காலம் தாழ்த்தாது, இந்தியர்களின் பிரச்சனையை தீர்க்கவும் இந்தியர்களின் உரிமைக்காக அரசாங்கத்திடம் போராடவும் முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 

“அதில் முதல் கட்ட நடவடிக்கையாக  கிள்ளானில் பெரும் பிரச்சனையான இருந்து வரும் சிம்பாங் லீமா தமிழ் பள்ளியின் மறு சீரமைப்பு கட்டுமானப் பணியை அரசாங்கமே முழுமையாக ஏற்றுக் கொள்ள மஇக அம்னோவை வலியுறுத்த தயாரா?”, என சவால் விடுத்தார் சார்ல்ஸ்.
 

கட்டுமானத்தின் பொறுப்பையும் அதன் செலவுகளையும் கூட்டரசு அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வலியுறுத்தினால்தான் ஜி. பழனிவேல் “முழு அமைச்சரானதற்கு ஓர் அர்த்தம் இருக்கும்” என தாம் நம்புவதாக சார்ல்ஸ் கூறினார்.

மூலம் – மலேசிய நண்பன்

2 Aug | செய்தி| மலேசியாஇன்று

அண்மையில் ஜி. பழனிவேல் முழு அமைச்சராக நியமனம் பெற்றதற்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
 
“அவருக்கு முழு அமைச்சர் பதவி கிடைத்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடையும் அதே வேளையில், தேமுயில் வேறு இந்தியர் கட்சிகள் இணைக்கப் பட்டால், மஇகா உடனடியாக வெளியேறும் என  அவர் கூறியிருப்பது வியப்பை அளிக்கின்றது”, என சார்ல்ஸ் கூறினார்.
 
தேமுயில் மற்றொரு இந்திய கட்சி இணைக்கப் பட்டால் மஇகா வெளியேறும் என உறுதியாகச் சொல்வதற்கான தைரியம் கொண்டுள்ள பழனிவேல், சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் விவகாரத்திலும், பெர்சே தலைவர் அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்லும் போதும் அமைதி காத்ததுதான் ஏன் என புரியாத புதிராக உள்ளது என்றாரவர்.
 
இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வர தயங்கும் இவர், கட்சியை தற்காத்துக் கொள்ள மட்டும் குரல் எழுப்பியிருப்பது, அவரின் ஈடுபாடு எதில் இருக்கின்றது என்பதை மிக தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்று அவர் மேலும் கூறினார்.
 
தன் சுயநலத்தை தவிர்த்து மக்கள், அதுவும் இந்திய மக்கள், நலனுக்காக போராடும் கட்சியாக மஇகா இருப்பதை அவர் உறுதி செய்தாக வேண்டும். கடந்த 53 ஆண்டு காலமாக இந்தியர்களின் பொருளாதாரம் 2.6 விழுக்காடு என்ற தேக்க நிலையிலிருந்து இன்னும் மேலும் உயரவே இல்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
 
மலேசியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டு வருவது அசைக்க முடியாத உண்மை என கூறிய சார்ல்ஸ், இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முக்கியத்துவம் காட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
 
“அப்போதுதான் உங்களை யாரும் அசைக்க முடியாது. இல்லையேல், இந்தியர்களின் நலனைக் காக்க தேமுயில் இந்தியர்களின் கட்சிகள் இணையும் சாத்தியம் இல்லை என்றால் மஇகாவுக்கு எதிராகப் பல இந்தியர் கட்சிகள் எழ அதிகமான வாய்ப்புகள் உள்ளன”, என்பதை நினைவுறுத்திய சார்ல்ஸ், மக்கள் கூட்டணியிலுள்ள இந்திய தலைவர்கள் இந்தியர்களின் உரிமைகளையும், நலன்கனையும் தற்காத்துவருவதையும் அவர் நினைவுறுத்தினார்

மூலம் :- மலேசிய நண்பன்

மூலம் :- மலேசிய நண்பன்

மூலம் :- மலேசியா இன்று

 18 Jul | செய்தி|
 
ஜூலை 9 இல் நடைபெற்ற பெர்சே பேரணி 2.0 இல் பல இன மக்கள் பாகுபாடு பாராமல் ஒன்று திரண்டனர்.

அதில் இந்தியர்கள் சலைத்தவர்கள் அல்லர் என பேரணியில் கலந்துக் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை காட்டுகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
“நான் மஇகா தலைவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பியதற்காக ஹங்துவா கிளைத் தலைவர் ம.வெற்றிவேல் பொங்கி எழுந்துள்ளார். இத்தனை வருடங்களாக இந்தியர்களுக்காக என்ன செய்தீர்கள் என நான் கேட்க விரும்பவில்லை.”
 
அண்மையில் பெர்சே 2.0 பேரணியை நடத்துவதற்கு அதன் தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கினார். அதில் மிக முக்கியமான சவாலே அவரது குடியுரிமையைப் பறிக்கச் சொன்னதுதான். மஇகா தலைவர்கள் இந்தப் பேரணியை ஆதரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மலேசியாவில் முதல் முதலாக ஓர் இந்திய பெண்மணி நாட்டு மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் போராடியதற்காக அவரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் எனக் கூறிப்பட்டபோது அதைத் தடுக்க நம் மஇகா இந்திய தலைவர்கள் முன் வர வில்லையே என்பதுதான் இங்கு பதிலளிக்க முடியாத கேள்வியாக இருக்கிறது.

“இது ஒரு பெண்ணின் உரிமை அல்ல. இது ஓர் இந்தியரின் உரிமை. நமது குடியுரிமை. யாரிடமிருந்தும் பறிக்க முடியாத உரிமையை ஓர் இந்திய பெண்மணியிடமிருந்து பறிக்கச் சொன்னபோது நமது மஇகா தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்”, என கேள்வி எழுப்பிய சார்ல்ஸ் இதற்கும் அமைதியாக இருந்தது மட்டும்தானே மிச்சம் என வேடிக்கையாக கூறினார்.
 
“ஒரு வேளை, பெர்சே 2.0 பேரணி அவர்களது ஆட்சி முறைக்கு அப்பாற்பட்டு இருப்பதாக அவர்கள் கருதலாம். ஆனால் சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் விவகாரம் என்ன ஆனது? மலேசியாவாழ் ஒட்டு மொத்த இந்தியர்களையும் தாழ்மைப்படுத்தியும் இழிவுப்படுத்தியும் எழுதப் பட்ட நூல் அது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்களும் அந்நாவலைத் தடை செய்யக் கோரியிருந்தபோது, அதில் சிறு மாற்றங்களுடன் மறுபடியும் பாட புத்தகமாக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டபோது நமது மஇகா தலைவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தனர்”, என்ற வினாவைத் தொடுத்த சார்ல்ஸ், இவ்வாறுதான் அவர்கள் இத்தனைக் காலமும்  இருந்து வருகிறார்கள் என நான் சொன்னால்தான் தெரியுமா என்ன? என்றார்.
 
“ஆகவே, இதுவரை மஇகா தலைவர்கள் என்ன செய்தார்கள் என நான் கேட்க வில்லை. ஏன் ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்த்த இண்டர்லோக் மற்றும் பெர்சே 2.0 பேரணி தலைவரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி குரல் எழுப்பவில்லை என்றுதான் கேட்கிறேன்”, என்றார் சார்ல்ஸ்.

நீர் என்ன செய்தீர் என்று ம.வெற்றிவேல் என்னைக் கேட்டிருந்தார்.

“கிணற்று தவளையாக இருக்கும் அவருக்கு நான் என் தொகுதி மக்களுக்கும் இந்தியர்களுக்கும் என்னென்ன செய்துள்ளேன், நடாளுமன்றத்தில் என்னென்ன விவகாரங்கள் பற்றி வாதாடியுள்ளேன் என்பது போன்ற விவரங்களை எனது வலைப்பதிவு அல்லது நாடாளுமன்ற வலைத்தளம் ஆகியவற்றிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என கூறிய சார்ல்ஸ், ஒரு வேளை அவருக்கு அவற்றிலுள்ள விவரங்கள் தெளிவாக புரியாமல் போனால், நேரடியாக விவாதம் நடத்த நான் தயார். ம.வெற்றிவேல் தயாரா?”, என்று அவர் சவால் விடுத்தார்.

Source : Oriental Daily 2nd Jan 2009

Title : Stop violence, Israel

English Statement : Global Pressure Needed to Stop Organised Murder in Gaza

Malay Statement : Tekanan sejagat dunia diperlukan untuk menghentikan pembunuhan di Gaza

statement_israel

Source : Oriental Daily 1st Jan 2009

Title : Indians upset with MIC

English Statement : Oh Samy!

Malay Statement : Amboi Samy!

statement_oh-samy1