• மூலம் :- செம்பருத்தி
  • Tuesday, December 20, 2011 11:15 pm

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியர்கள் பலருக்கு துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

கடந்த வெள்ளிகிழமை  சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேலும் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவரும் மனிதவளத் துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரமணியமும்  பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

ஆனால் ‘இண்டேர்லோக் நாவல் உண்மையிலே மீட்கப்பட்டதா; இல்லையா? என்பது குறித்து கல்வியமைச்சர் மொகதீன் யாசின் அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்க வேண்டும்’ என முகமட் ஃபுவாட் கூறியிருப்பது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் மீண்டும் அவமானப்படுத்தும் செயல் என கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

அப்படியானால், ஆளங்கட்சியிலிருந்துகொண்டு இந்திய சமூதாயத்தின் தலைவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் மஇகா தலைவர்களின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லையா? இந்தியர்களின் பிரதிநிதிகளின் முடிவுக்கு அரசாங்கம் மதிப்பளிக்காதா? என அவர் வினவினார்.

ஆரம்பத்தில் இண்டர்லோக் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே அந்நாவலை அரசாங்கம் மீட்டுக்கொண்டிருக்கவேண்டும். தாமதம் செய்தற்குக் காரணமே இல்லை. அந்த நாவலில் கூறப்பட்டுள்ள விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பிரச்னை எழுப்பப்பட்டதும் அது பள்ளிக்கூடப் பாடப் புத்தகத் திட்டத்திருந்து உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

ஆனால், தற்போது மீட்டுக் கொள்ளப்படும் எனக் கூறுவதும் பின்பு, துணைத் தலைமையமைச்சரின் அறிவிப்பிற்கு காத்திருக்க வேண்டும் என்பதும், மத்திய அரசாங்கத்தின் அரசியல் நாடகமே என்பதனை மக்கள் புரிந்து கொண்டு, வரும் பொதுத் தேர்தலில் தீர்க்க முடிவு எடுக்குமாறும் சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார்.

மூலம் :- மலேசியா இன்று

30 Mar | செய்தி.

தற்போது தலை தூக்கி நிற்கும் பிரச்சனைகளில் இண்டர்லோக் நாவலும் ஒன்று. மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இந்த நாவலை மீட்டுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். 
 
“நாங்கள் எங்கள் சுய மாரியாதையை இழக்க விரும்பவில்லை; உரிமைகளை இழக்க விரும்பவில்லை. மலேசியாவில் பிறந்து பல துறைகளில் பல சாதனைகள் புரிந்த நாங்கள் மார்தூக்கி பீடு நடை போட வேண்டியவர்கள். ஆனால் இந்நாவலில் இந்தியர்களையும் சீனர்களையும் இழிவுப்படுத்தியும் தாழ்மைப்படுத்தியும் எழுதியிருப்பதை பார்த்தால் நாங்கள் கூனிக் குறுகி தலைகுனிந்து மடிய நேரிடும்”, என பல இந்தியர்கள் கருதுகின்றனர் என சார்லஸ் மேலும் விளக்கினார்.
 
துணைப் பிரதமர் இந்நாவல் விவகாரத்தில் முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், ஒப்புக்கொண்ட சில திருத்தங்களுடன் மீண்டும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்ற முடிவில் ஆணித்தரமாக இருப்பதாகவும் இன்று அறிக்கை வெளியிட்டு இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் இந்தியர்களின் உணர்ச்சியை புரிந்துக் கொள்ளவில்லை.
 
ஆதலால், இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்க களம் இறங்கியிருக்கும் பிரதமர் முதலில் இந்தியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்ள  உத்தரவிட வேண்டும்.  அப்போதுதான் இந்தியர்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை பிறக்கும். பிரதமர் “ஒரே மலேசியா”  கொள்கையில் இந்தியர்களை ஒதுக்கவில்லை, வேறுப்படுத்தவில்லை என நிரூபிக்க முடியும்.
 
“பிரதமரே, உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற தயாரா? இந்தியர்களின் பிரச்சனைகளில் முதல் பிரச்சனையாக இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்ள தயாரா?”, என சார்ல்ஸ் சந்தியாகோ வினவினார்

மூலம்: செம்பருத்தி

Saturday, March 26, 2011 11:31 am

இண்டர்லோக் நாவலில் “பறையா” என்ற சொல் நீக்கப்பட்டு, இந்நாவல் மறுபடியும் வரலாற்றுப் பாடநூலக பள்ளிகளில் பயன்படுத்தப்படும் எனும் கல்வியமைச்சரின் முடிவு இந்தியர்களால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஏனெனில், இந்நாவலில் “பறையா” என்ற சொல் மட்டும் பிரச்னையல்ல. அதில் வரும் மணியம் மற்றும் சின் ஹுவாட் என்ற கதாபாத்திரமும் அவர்களை வர்ணிக்கும் முறையும் தவறாகத் தான் உள்ளது.

இந்த “பறையா” என்ற சொல்லை நீக்கி விட்டாலும் மணியம் எனும் கதாப்பாத்திரம் இந்தியரே. சின் ஹுவாட் எனும் கதாப்பாத்திரம் சீனரே. ஆக, அவர்களின் குணங்களை அந்நாவலில் எழுதியிருக்கும் வண்ணம், குறிப்பிட்ட இனத்தவர்களை அதாவது இந்தியர்களையும் சீனர்களையும் தாழ்மைப் படுத்தியும் இழிவுப் படுத்தியேத்தான் உள்ளது.

அதுமட்டுமில்லாது, இந்தியர்களும் சீனர்களும் குடியேறிகள் என எழுதப்பட்டிருப்பது, நமது உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க ஒரு ஆரம்ப நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது.

அதுமட்டும் அல்ல, இந்தியர்களையும் சீனர்களையும் குடியேறிகள் என கூறப்பட்டு நமக்குள் இருக்கும் உரிமைகளெல்லாம் பறிபோகி கடைசியில் மலேசியாவில் பிறந்தவராக நாம் இருந்தும் குரியுரிமை இல்லாமல் அந்நியராக முத்தரைக் குத்தப்பட்டு விடுவோம். நாளடைவில் இந்தியர்கள் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நடமாட நேரிடும் என சார்ல்ஸ் எச்சரித்தார்.

இந்த நாவல் பள்ளிகளில் பயன்படுத்துவதால் பள்ளிகளில் ஆரம்பித்து, பிறகு மக்களிடையே, மலேசியாவிடையே என நீண்டு இறுதியில் நாடுகளிடையே நாம் மலேசியாவில் குடியேறிகள் என்ற சின்னத்தை பதிக்கக் கூடும்.

ஒரே மலேசியா என நமது பிரதமர் முழக்கம் போட்டுக் கொண்டிருந்தாலும் இந்தியர்களின் கருத்தும் உணர்ச்சியும் புறக்கணிக்கப் பட்டுவருவது இண்டர்லோக் நாவல் விவகாரத்தின் வழி நிரூபணமாகிறது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னணி இந்தியர்களின் நலனை காக்கின்றது. இந்தியர்களின் பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்வதெல்லாம் வெட்ட வெறும் பொய் என தெளிவாகிறது. ஆகவே, நாவலை திருத்தம் செய்கிறோம் என்பதை நிறுத்தி விட்டு மீட்டுக் கொள்கிறோம் என அரசாங்கம் கூற வேண்டும்.

அப்படி ஒருவேலை, துணைப் பிரதமரால் இந்தியர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க முடியாமல் போனால், இவ்விவகாரத்தை தீர்க்க பிரதமர் முன்வர வேண்டும். ஒரே மலேசியா கொள்கையரான பிரதமர் இந்தியர்களை மதிப்பவராக இருந்தால் இண்டர்லோக் நாவலை தடை செய்து நிரூபிக்க தயாரா? என சார்ல்ஸ் சவால் விடுத்தார்.

மூலம்: மலேசிய நண்பன்

மூலம்: மக்கள் ஓசை

மூலம்:- மலேசியா இன்று

26 Mar | செய்தி.

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலில் “பறையா” என்ற சொல் நீக்கப்பட்டு, அந்நாவல் மறுபடியும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் எனும் கல்வியமைச்சரின் முடிவு இந்தியர்களால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
ஏனெனில் இந்நாவலில் “பறையா” என்ற சொல் மட்டும் பிரச்னையல்ல. அதில் வரும் மணியம் மற்றும் சின் ஹுவாட் என்ற கதாபாத்திரங்களும் அவர்களை வர்ணிக்கும் முறைகளும் தவறானவையே.
 
“பறையா” என்ற சொல்லை நீக்கி விட்டாலும் மணியம் எனும் கதாப்பாத்திரம் இந்தியரே; சின் ஹுவாட் எனும் கதாப்பாத்திரம் சீனரே. ஆக,  அந்நாவலில் எழுதப்பட்டிருக்கும் அவர்களின் குணங்கள் மூலம், குறிப்பிட்ட இனத்தவர்கள் அதாவது இந்தியர்களும் சீனர்களும் தாழ்மைப் படுத்தியும் இழிவுப் படுத்தியும் காட்டப்படுவது  அப்படியே உள்ளன.
 
அதுமட்டுமில்லாது, இந்தியர்களும் சீனர்களும் குடியேறிகள் என எழுதப்பட்டிருப்பது, நமது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் ஓர் ஆரம்ப நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது.
 
அதுமட்டும் அல்ல, இந்தியர்களையும் சீனர்களையும் குடியேறிகள் எனக் கூறி, நமது உரிமைகள் பறிக்கப்பட்டு, இறுதியில் நாம் மலேசியாவில் பிறந்தவராக இருந்தும் குடியுரிமை இல்லாத அந்நியராக முத்திரைக் குத்தப்பட்டு விடுவோம். நாளடைவில் இந்தியர்கள் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நடமாட நேரிடும் என சார்ல்ஸ் எச்சரித்தார்.
 
இந்த நாவலைப் பள்ளிகளில் பயன்படுத்துவதால் பள்ளிகளில் ஆரம்பித்து, பிறகு மக்களிடையே பரவி இறுதியில் நாம் மலேசியாவில் குடியேறிகள் என்ற முத்திரையோடு நடமாடுவோம்.
 
ஒரே மலேசியா என நமது பிரதமர் முழக்கம் போட்டுக் கொண்டிருந்தாலும், இந்தியர்களின் கருத்தும் உணர்ச்சியும் புறக்கணிக்கப்பட்டு வருவது இண்டர்லோக் நாவல் விவகாரத்தின் வழி நிரூபிக்கப்பட்டுள்ளதை சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னணி இந்தியர்களின் நலனைக் காக்கின்றது; இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்க்கின்றது என்று சொல்வதெல்லாம் வெறும் பொய் என்பது இப்போது தெளிவாகிறது.
 
“ஆகவே, நாவலை திருத்தம் செய்கிறோம் என்பதை நிறுத்தி விட்டு மீட்டுக் கொள்கிறோம் என அரசாங்கம் கூற வேண்டும்.”

ஒருவேளை, துணைப் பிரதமரால் இந்தியர்களின் கோரிக்கைக்குச் சாதகமாக முடிவு எடுக்க முடியாமல் போனால், இவ்விவகாரத்தைத் தீர்க்க பிரதமர் முன்வர வேண்டும்.

ஒரே மலேசியா கொள்கையரான பிரதமர் இந்தியர்களை மதிப்பவர் என்றால், இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொண்டு அதனை நிரூபிக்க தயாரா என்று சார்ல்ஸ் சந்தியாகோ சவால் விடுத்தார்.

சர்ச்சைக் குரிய இண்டர்லோக் நாவலில் பறையாஎன்ற சொல் நீக்கப்பட்டு, இந்நாவல் மறுபடியும் பள்ளிகளில் பயன்படுத்தப் படும் எனும் கல்வியமைச்சரின் முடிவு இந்தியர்களால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஏனெனில் இந்நாவலில் பறையாஎன்ற சொல் மட்டும் பிரச்சனையல்ல. அதில் வரும் மணியம் மற்றும் சின் ஹுவாட் என்ற கதாபாத்திரமும் அவர்களை வர்ணிக்கும் முறையும் தவறாகத் தான் உள்ளது.

இந்த பறையாஎன்ற சொல்லை நீக்கி விட்டாலும் மணியம் எனும் கதாப்பாத்திரம் இந்தியரே. சின் ஹுவாட் எனும் கதாப்பாத்திரம் சீனரே. ஆக, அவர்களின் குணங்களை அந்நாவலில் எழுதியிருக்கும் வண்ணம், குறிப்பிட்ட இனத்தவர்களை அதாவது இந்தியர்களையும் சீனர்களையும் தாழ்மைப் படுத்தியும் இழிவுப் படுத்தியேத்தான் உள்ளது.

அதுமட்டுமில்லாது, இந்தியர்களும் சீனர்களும் குடியேறிகள் என எழுதப்பட்டிருப்பது, நமது உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க ஒரு ஆரம்ப நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது.

அதுமட்டும் அல்ல, இந்தியர்களையும் சீனர்களையும் குடியேறிகள் என கூறப்பட்டு நமக்குள் இருக்கும் உரிமைகளெல்லாம் பறிபோகி கடைசியில் மலேசியாவில் பிறந்தவராக நாம் இருந்தும் குரியுரிமை இல்லாமல் அந்நியராக முத்தரைக் குத்தப் பட்டு விடுவோம். நாளடைவில் இந்தியர்கள் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நடமாட நேரிடும் என சார்ல்ஸ் எச்சரித்தார்

இந்த நாவல் பள்ளிகளில் பயன்படுத்துவதால் பள்ளிகளில் ஆரம்பித்து, பிறகு மக்களிடையே மலேசியாவிடையே என நீண்டு இறுதியில் நாடுகளிடையே நாம் மலேசியாவில் குடியேறிகள் என்ற சின்னத்தை பதிக்கக் கூடும்.

ஒரே மலேசியா என நமது பிரதமர் முழக்கம் போட்டுக் கொண்டிருந்தாலும் இந்தியர்களின் கருத்தும் உணர்ச்சியும் புறக்கணிக்கப் பட்டுவருவது இண்டர்லோக் நாவல் விவகாரத்தின் வழி நிரூபணமாகிறது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார். தேசிய முன்னணி இந்தியர்களின் நலனை காக்கின்றது. இந்தியர்களின் பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்வதெல்லாம் வெட்ட வெறும் பொய் என தெளிவாகிறது

ஆகவே, நாவலை திருத்தம் செய்கிறோம் என்பதை நிறுத்தி விட்டு மீட்டுக் கொள்கிறோம் என அரசாங்கம் கூற வேண்டும். அப்படி ஒருவேலை, துணைப்பிரதமரால் இந்தியர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க முடியாமல் போனால், இவ்விவகாரத்தை தீர்க்க பிரதமர் முன்வர வேண்டும். ஒரே மலேசியா கொள்கையரான பிரதமர் இந்தியர்களை மதிப்பவராக இருந்தால் இண்டர்லோக் நாவலை தடை செய்து நிரூபிக்க தயாரா என சார்ல்ஸ் சவால் விடுத்தார்.

மூலம் :௦- மலேசியா இன்று

21 Mar | செய்தி.

ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மலாய் இலக்கிய கட்டாய பாடநூலாக்கப்படிருக்கும் இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் நியட் இன்று பின்னேரத்தில் பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தது.

இச்சந்திப்பில், பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் சந்தியாகு (கிள்ளான்), துணை முதல் அமைச்சர் பி. இராமசாமி (பினாங்கு) எம்.குலசேகரன் (ஈப்போ பாரட்), ஆர்.சிவராசா (சுபாங்), எம்.மனோகரன் (தெலுக் இந்தான்), தியன் சுவா (பத்து), டாக்டர் மரியா (கோத்தா ராஜா), போங் போ குவான் (பத்து காஜா) மற்றும் சிம் (கோத்தா மலாக்கா) ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பில் நியட் தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம் தலைமையில் சென்ற குழுவினர் இண்டர்லோக் நாவல் ஏன் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான விளக்கம் அளித்தனர்.

இண்டர்லோக் நாவல் குறித்து நாடாளுமன்றத்தில் ஓர் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவைத் தலைவர் அத்தீர்மானத்தை அனுமதிக்க மறுத்து விட்டார் என்பதைச் சுட்டிக் காட்டிய எம். மனோகரன், இன்றையச் சந்திப்பைத் தொடர்ந்து பக்கத்தான் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடும் என்று கூறினார்.

அண்மையில் சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலை மீள் ஆய்வு செய்யும் சுயேச்சைக் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் கருத்து வேறுப்பாட்டல் விலகியதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அதன் காரணம் அம்மூவர் சேர்ந்து பரிந்துரைத்த 100 திருத்தங்களையும் டேவான் பகாசா டான் புஸ்டகாவால் நிரகரிக்கப்பட்டதாலாகும்.

ஆனால், பரிந்துரைக்கப்பட்ட100 திருத்தங்களையும் தாம் நிராகரித்ததாகக் கூறப்படுவதை மறுத்த முகைதின், உண்மையில், திருத்தங்களை மறு ஆய்வுசெய்யுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். முக்கியமான விசயத்தை விட்டுவிலகி சின்னச்சின்ன விசயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக தாம் கருதியதே இதற்குக் காரணம் என்றார் அவர்.

ஆயினும் இங்கு எழும் கேள்வியே ஏன் தேவையில்லாமல் இந்த நாவலை திருத்தம் செய்ய கலந்துரையாடல் நடத்தப் படவேண்டும் என்பதேயாகும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.

இந்நாவல் பல இந்தியர்களிடமிருந்தும் பல தரப்பினர்களிடமிருந்தும் பல எதிர்ப்புகளை எதிர்நோக்கியுள்ளது. இவர்கள் அந்நாவலை மீட்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி வறுகின்றனர்.

ஆயினும் அரசாங்கம் அவர்களின் உணர்ச்சிக்கும் கருத்துக்கும் மதிப்பளிக்காது அந்நாவலை தடை செய்யாமல் திருத்தம் செய்வதாக சொல்லி காலம் தாழ்த்துவது பொறுப்பற்ற செயல் என தாம் கருதுவதாக சார்ல்ஸ் கூறினார்.

அரசாங்கம் உண்மையில் நாட்டின் ஒற்றுமைக்கும் இன ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தருகின்றது என்றால் இந்தியர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இண்டர்லோக் நாவலில் திருத்தம் செய்வதை விட உடனடியாக மீட்டுக் கொள்வதே சிறந்த வலி என சார்ல்ஸ் சந்தியாகோ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்

Source: Free Malaysia Today

 

Tarani Palani | March 17, 2011

In a collective stand, Pakatan MPs call for the revocation of the controversial book and for Najib to replace his deputy in the deliberation process.

KUALA LUMPUR: Pakatan Rakyat MPs today made a collective stand, calling for the immediate withdrawal of the Interlok novel.

They also wanted Deputy Prime Minister Muhyiddin Yassin to be removed from the deliberation process based on the three Indian representatives quitting the independent panel, tasked with amending the book.

“Muhyiddin should be taken out and (Prime Minister) Najib (Tun Razak) should replace him,” DAP MP Charles Santiago told reporters in Parliament.

PKR MP Johari Abdul urged the government to take heed of the people’s voice. “If the people say it is sensitive, accept it lah.”
Johari also took a swipe at the government’s decision to edit the book after a firestorm of protest, especially from the Indian community.

The book, penned by national laureate Abdullah Hussain, courted controversy when it was introduced as a component for the Malay literature subject for Form Five students this year.

“This is the work of a national laureate, how are you going to edit the gist of the work (without violating the author’s right)?” asked the PKR MP.

DAP’s Teluk Intan MP M Manogaran said the matter must be resolved quickly as the students would sit for their SPM examination in November.

He urged the government to apologise and immediately retract the book from the syllabus.

The press conference was also attended by MP Dzulkefly Ahmad (PAS-Kuala Selangor), M Kulasegaran (DAP-Ipoh Barat) and R Sivarasa (PKR-Subang).

The three panellists had walked out complaining that 100 suggested amendments were shot down, but Muhyiddin, who is also education minister, said this was because it concerned “minute” details.