மூலம்:- செம்பருத்தி  April 23, 2011 3:24 am

கிள்ளானில் அணு உலை கட்டுமானத் திட்டத்தை எதிர்த்துக் கூட்டம் கூட்டியதற்காக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

கிள்ளானில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி செக்ஷண் 52 சட்டத்தின் கீழ், காவல்துறை அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பான கூட்டமொன்றை ஏற்பாடுசெய்தார் என காவல்துறை அதிகாரி ஒருவரால்  சார்ல்ஸ் சந்தியாகோ மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

கடந்த புதன்கிழமை கிள்ளான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர், சார்ல்ஸ் “இது ஜனநாயக நாடு, நமது எண்ணத்தை தெரிவிக்க கூட்டம் நடத்த நமக்கு உரிமை இல்லையா?”, என கேள்வி எழுப்பினார்.

“இது தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். நமக்கு பேசும் சுதந்திரம் உள்ளது. நமது எண்ணத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும் சொல்லப் போனால் இவ்வாறான கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் என் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது எனது உரிமையையும் கிள்ளான் மக்களின் உரிமையையும் சேர்த்து பறிக்கும் முயற்சி என கூறிய சார்ல்ஸ் அதே நாளன்று கேப்ஸ் மற்றும் அம்னோ நடத்திய மறியலுக்கு எந்த ஒரு காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

கிள்ளானில் அணுஉலை கட்டுமானம் எவ்வளவு ஆபத்து விளைவிக்கும் என்பதனைப் பற்றியும் அதன் அபாயகரத்தையும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க திரட்டப்பட்ட இக்கூட்டத்தை தலைமை தாங்கியதற்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளை, ‘பாலாய் போலீஸ் உதாரா’ என அழைக்கப்படும் வட காவல் நிலையத்திற்கு முன்பாக ‘டத்தோ தி’ ஆபாச காணொளி பற்றி மனு தாக்கல் செய்ய கூட்டம் கூட்டியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒரே மலேசியாவின் இரட்டை வேடத்தை மிகத் தெளிவாகத் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என சார்ல்ஸ் சாடினார்.

“ஆனாலும், இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. கிள்ளானிலோ, மலேசியாவின் எந்த ஒரு மூலையிலே அணு உலை கட்டக் கூடாது என்பதையும் அது மக்களுக்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை பொது மக்களுக்குத் தெரிவிப்பதும் எனது தலையாய கடமையாகும். இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனது முயற்சியும் பணியும் மேலும் தொடரும்”, என சார்ல்ஸ் சந்தியாகோ திட்டவட்டமாக கூறினார்.

மூலம் :- மலேசியா இன்று 22 Apr

கிள்ளானில் அணு உலை கட்டுமானத் திட்டத்தை எதிர்த்து கூட்டம் கூட்டியதற்காக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மீது காவல் அதிகாரி ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3 இல் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை கிள்ளான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர், சார்ல்ஸ் “இது ஜனநாயக நாடு, நமது எண்ணத்தை தெரிவிக்க கூட்டம் நடத்த நமக்கு உரிமை இல்லையா?”, என கேள்வி எழுப்பினார்.
 
“இது தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். நமக்கு பேசும் சுதந்திரம் உள்ளது. நமது எண்ணத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும் சொல்லப் போனால் இவ்வாறான கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் என் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பது எனது உரிமையையும் கிள்ளான் மக்களின் உரிமையையும் சேர்த்துப் பறிக்கும் முயற்சி”, எனக் கூறிய சார்ல்ஸ், “அதே நாளன்று கேப்ஸ் மற்றும் அம்னோ நடத்திய மறியலுக்கு எதிராக எந்த ஒரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?, என்று வினவினார்.
 
கிள்ளானில் அணு உலை கட்டுமானம் எவ்வளவு ஆபத்து விளைவிக்கும் என்பதைப் பற்றியும் அது எவ்வளவு அபாயகரமானது என்பதைப் பற்றியும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே வேளையில், பாலாய் போலீஸ் உத்தாரா காவல் நிலையத்தின் முன் “டத்தோ டி” ஆபாச வீடியோ பற்றி புகார் தாக்கல் செய்ய கூட்டம் கூட்டியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒரே மலேசியாவின் இரட்டை வேடத்தை மிகத் தெளிவாக காட்டுகிறது என சார்ல்ஸ் சாடினார்.
 
“ஆனாலும், இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. கிள்ளானிலோ, மலேசியாவின் எந்த ஒரு மூலையிலே அணு உலை கட்டக் கூடாது என்பதையும் அது மக்களுக்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை பொது மக்களுக்குத் தெரிவிப்பதும் எனது தலையாய கடமையாகும். இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனது முயற்சியும் பணியும் மேலும் தொடரும்”, என திட்டவட்டமாக கூறினார் சார்ல்ஸ் சந்தியாகோ

மூலம் :- மலேசிய நண்பன்

மூலம்: மலேசிய நண்பன்

Source :- Bernama    March 25, 2011 20:48 PM

BANGKOK, March 25 (Bernama) — Dr Surin Pitsuwan, secretary-general of the Association of Southeast Asian Nations (Asean), said he expected Asean member states to review their nuclear power plant policies following the nuclear plant crisis in Japan.

Surin was speaking to reporters about nuclear power plant policies in Southeast Asia in the wake of the nuclear power plant crisis in Japan.

Thai News Agency (TNA) reported him as saying that Asean member states that had nuclear power plant projects might review their policies.

He added that Asean members might have to review their policies carefully.

Although nuclear power is sustainable and clean, an unanticipated incident may cause serious problems like what is happening in Japan.

At the moment, European countries are reviewing their nuclear power plant policies.

Surin also said that Asean has planned initial assistance for quake-torn Japan and that the earthquake might result in some industries being relocated from Japan to other countries.

In this case, Asean member states must cooperatively work out measures to attract investors from Japan.

மூலம் – மலேசியா இன்று

15 Mar | செய்தி.

ஜப்பானையே உலுக்கிய சம்பவம் நிகழ்ந்ததை அறிந்தும் எரிப்பொருள், பசுமை தொழில்நுட்பம் வளம் மற்றும் நீர் வள அமைச்சர் பீட்டர் சின் மலேசிய திட்டப்படி இரண்டு அணுசக்தி நிலையங்களை நிறுவும் என்று அறிவித்துள்ளார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
அவர் “அரசாங்கம் மக்களுக்கு தெரியாமல் எதுவும் ரகசியமாக செய்யாது” என கூறியுள்ளார். ஆயினும் இவ்விவகாரத்தில் அரசாங்கம் “ரகசிய கலாச்சாரத்தை”த்தான் பயன்படுத்துகின்றது என்றார் அவர்.
 
மார்ச் 11இல் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி, அணு சக்தி பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்திற்குத் தெளிவான எச்சரிக்கையாக இருக்கின்றது.
.
புக்குஷிமா உலகிலே தலை சிறந்த 25 அணுசக்தி நிலையங்களில் ஒன்று. ஆயினும் புக்குஷிமா டைய்ச்சி அணுசக்தி நிலையத்தின் கதிரியக்க அளவு பாதுகாப்பு வரம்புக்கு மேல் இருந்ததால் அந்த நிலையை அது “அவசரமானச் சூழ்நிலை” என்று பிரகடணம் செய்திருந்ததை சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
 
அணுசக்தித் துறையில் ஜப்பானுக்கு அறுபது ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இருந்தும் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்கின்றன. 1999 இல் தொகைமுராவில் எரி பொருள் அணு சக்தி கட்டுபாடியிழந்ததால் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. அதன் கதிரியக்க கசிவால் நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுமில்லாமல் உள்ளூர் விவசாயத் துறையையும் வெகுவாகப் பாதித்தது.
 
இவ்வளவு நுணுக்கங்களும் அனுபவம் நிறைந்த ஜப்பானே அணுசக்தியால் பாதிக்கப்படும்போது,  மலேசியா எம்மாத்திரம்? இவ்வாறான பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிடுவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
மற்ற மின்சக்தியை காட்டிலும், இந்த அணுசக்திலுள்ள பிரச்சனை மிக மிக பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குவதாகும். 10 கிலோமீட்டர் தூர அளவுக்குள் 200,000 மக்கள் அவர்களது பாதுகாப்புக்காக இடம் மாறுவதற்கான காரணம் சூரிய அணுசக்தியால் ஏற்படும் விளைவுகளே ஆகும். இதே மாறியான நிலைமையால்தான் கடந்த வாரம் புக்குஷிமா கட்டுபாடு இல்லாமல் போனது.
 
ஓர் அணு உலை ஒரு மாபெரும் நீர் கொந்தளிப்பை போன்றது. அதைக் குளுமைப் படுத்த நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தான் அணுசக்தி நிலையம் ஆறு அல்லது கடலுக்கு அருகில் நிறுவப்படுகின்றன.
 
ஆயினும், இவை தண்ணீர் சம்பந்தப் பட்ட பேரிடர்களை, அதாவது சுனாமி, வெள்ளம், புயல், அல்லது வரட்சி, ஏற்படுத்தும். நீருக்கு அருகாமையில் இருப்பதால் சற்றுப்புறத் தூய்மைக் கேடு மிக விரைவில் பரவ கூடும்.
 
மலேசியாவில் வெள்ளப் பேரிடர் சம்பந்தப் பட்ட விசயத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் எந்த ஓர் அணுசக்தி நிலையம் நிறுவப்பட்டாலும் இதே போன்ற பிரச்சனையில்தான் நாமும் சிக்கிக் கொள்வோம் என அவர் மேலும் கூறினார்.
 
அதுமட்டுமின்றி, மலேசிய அணுவாற்றல் சட்டத்தின் கீழ், அணுசக்தி உற்பத்தியாளர்கள் அதனால் ஏற்படும் பேரிடருக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள்.
 
ஜப்பான் வேறு எந்த ஒரு வழியும் இல்லாததால்தான் அணுசக்தித் திட்டங்களைத் தொடங்கியது. ஆனால், மலேசியாவிற்கு எண்ணெய், எரிவாயு, தண்ணீர் தடம் மற்றும் சூரிய ஒளி என அனைத்தும் உள்ளன. அதிலும் நாம் சூரிய மின்கலம் உற்பத்தி செய்வதில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்.
 
ஆகவே, அரசாங்கம் ஜப்பானில் நிகழ்ந்த துயரங்களை ஒரு பாடமாகக் கொண்டு அணு உலை கட்டுமானத் திட்டப் பரிந்துரையை ரத்துத் செய்ய வேண்டும் என சார்ல்ஸ் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

 

ஜப்பானையே உலுக்கிய சம்பவம் நிகழ்ந்ததை அறிந்தும் எரிப்பொருள், பசுமை தொழில்நுட்பம் வளம் மற்றும் நீர் வள அமைச்சர் பீட்டர் சின் மலேசிய திட்டப் படி இரண்டு அணுவாயுத நிலையம் நிறுவப் போவதாக அறிவித்துள்ளார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

அவர் ” அரசாங்கம் மக்களுக்கு தெரியாமல் எதுவும் ரகசியமாக செய்யாது” என கூறியுள்ளார். ஆயினும் இவ்விவகாரத்தில் அரசாங்கம் ‘ரகசிய கலாச்சாரத்தை’ தான் பயன்படுத்துகின்றது என்றார் அவர்.

11 மார்ச் ஜப்பானில் நிகழ்ந்த இந்த சுனாமி, அணு சக்தி பயன்படுத்தும் அபாயகரத்தை தெளிவாக எச்சரிக்கின்றது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியின் காரணத்தால் ஜப்பானியரின் ஒரு சில அணு உலைக்கள் ஆபத்தான நிலையில் தள்ளபட்டு மீண்டும் நேற்று ஓர் அணு உலை வெடித்துள்ளது.

புகுஷிமா உலகிலே தலை சிறந்த 25 அணுசக்தி நிலையங்களில் ஒன்று. ஆயினும் புகுஷிமா டைய்ச்சி அணு சக்தி நிலையத்தின் கதிரியக்க அளவு பாதுகாப்பு வரம்புக்கு மேல் இருந்ததால் அந்த நிலையை அது “அவசரமான சூழ்நிலை” என்று பிரகடணம் செய்திருந்ததை அவர் நினைவுறுத்தினார்.

அணுவாயுத் துறையில் ஜப்பானுக்கு அறுபது ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இருந்தும் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்கின்றன. 1999 – ல் தொகைமுராவில் எரி பொருள் அணு சக்தி கட்டுபாடியிழந்ததால் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. அது கதிர் இயக்கத்தில் கசிவு ஏற்பட்டதால் நூற்றுக் கணக்கான மக்களை பாதித்தது மட்டுமில்லாமல் உள்ளூர் விவசாயத் துறையை வெகுவாக பாதித்தது.

இவ்வளவு நுணுக்கங்களும் அனுபவம் நிறைந்த ஜப்பானே அணுசக்தியால் விபத்துக்குள்ளாகும் போது, மலேசியா எம்மாத்திரம்? இவ்வாறான பெரிய அளவில் விளைவை ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிடுவதே தீர்க்கமான முடிவு என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

மற்ற மின்சக்தியை காட்டிலும், இந்த அணுசக்திலுள்ள பிரச்சனை மிக மிக பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். 10 km தூர அளவு 200 ,௦௦௦௦௦௦ 000 மக்கள் அவர்களது பாதுகாப்புக்காக இடம் மாறுவதற்கான காரணம் சூரிய அணுசக்தியால் ஏற்படும் விளைவுகளே ஆகும். இதே மாறியான நிலைமைத்தான் கடந்த வாரம் புகுஷிமா கட்டுபாடு இல்லாமல் ஆனது.

ஒரு அணு உலை ஒரு மாபெரும் நீர் கொந்தளிப்பை போன்றது. அதை குளுமைப் படுத்த நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தால் அணுசக்தி நிலையம் ஆறு அல்லது கடலுக்கு அருகில் நிறுவப்படுகின்றன.

ஆயினும், இவை தண்ணீர் சம்பந்தப் பட்ட பேரிடர்களை அதாவது சுனாமி, வெள்ளம், புயல், அல்லது வரட்சி ஏற்படுத்தக் கூட வாய்ப்புகள் உள்ளது. நீருக்கு அருகாமையில் இருப்பதால் சற்றுப்புறத் தூய்மைக் கேடு மிக விரைவில் பரவ கூடும்.

மலேசியாவில் வெள்ளப் பேரிடர் சம்பந்தப் பட்ட விசயத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் எந்த ஒரு அணு சக்தி நிலையத்தை நிறுவப்பட்டாலும் அதே போன்ற பிரச்சனையில் தான் நாமும் சிக்கிக் கொள்வோம் என அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, மலேசிய அணுவாற்றல் சட்டத்தின் கீழ், அணுசக்தி உற்பத்தியாளர்கள் அதனால் ஏற்படும் இயற்கை பேரிடருக்கு எந்தவொரு பொறுப்பேற்காது.

ஜப்பான் வேறு எந்த ஒரு வலி இல்லாமல் தான் அணு வாயுத் தொடங்கியது. ஆனால், மலேசியாவிற்கு எண்ணெய், எரிவாயு, உயிரியல் பருமன், தண்ணீர் தடம் மற்றும் சூரிய ஒளி என அனைத்தும் உள்ளன. அதுலும் நாம் சூரிய மின்கலம் உற்பத்தி செய்வதில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்.

ஆகவே, அரசாங்கம் ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த துயரங்களை ஒரு பாடமாக கொண்டு அணு உலை கட்டுமானத் திட்டப் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என சார்ல்ஸ் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

 

 

 

மூலம் :- மலேசிய நண்பன்