அண்மையில் அம்பாங், தெலோக் ஆயர்தாவார் கோலா குபு பாரு இடைநிலைப்பள்ளிகளில் நிகழ்ந்த சம்பவங்கள் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவலின் தாக்கமே.

 பள்ளிக்கூடம் என்பது நல்ல விஷயங்களை கற்று கொள்கிற இடமாகும். ஆனால், தற்போதைய நிலைமையே தலைகீழாக இருக்கிறது. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு பள்ளிகளில் எதிரிகள் நிறைந்தும் ஆசிரியர்கள் பகைவர்களாகவும் இருக்கிறனர் என சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார்.

இது அண்மையில் தெலோக் ஆயர்தாவார் இடைநிலைப்பள்ளியில் சாதிப்பெயரைச் சொல்லி மாணவன் முகத்தில் குத்திய சம்பவம், அதே சமயத்தில், இண்டர்லோக் நாவலில் எழுதியிருந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நாவலை தலைமசயாசிரியாரிடம் ஒப்படைக்க சென்ற கோலா குபு பாரு இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள் எந்த ஒரு வலுவான காரணமின்றியும் பெற்றோர்களின் அனுமதின்றியும் 10 மணி நேரம் போலீஸ் விசாரணையில் வைத்துள்ள செயல்கள் மூலம் நிரூபணமாகிறது.

 இவ்வாறு பெரும்பான்மையினத்தவர்கள் இந்திய மாணவர்களை அவமானப்படுத்தப்படுத்தி தாக்குவதும், தாக்கிப்பேசுவதும் தொடர் கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளியில் இவ்வாறான விஷயங்கள் நிகழ்ந்துக் கொண்டிருகின்றன. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் இவ்வாறான பல பிரச்சனைகள் தலை தூக்கி நிற்கின்றன.

 தனது பதவியை தவாரகப் பயன்படுத்திய பெற்றோர் ஆசியர்  சங்கத் தலைவரும் போலீஸ் அதிகாரியுமான பக்தியார் மட் ரஷிட்டின் செயலும் சம்பந்தப்பட்ட ஆசியர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, கல்வியமைச்சு சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு பார பட்சம் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்பிரச்சனைகள் உருவாக காரணமாய் இருக்கும் இண்டர்லோக் நாவலை உடனடி மீட்டுக் கொள்ள வேண்டும் என சார்ல்ஸ் சந்தியாகோ கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டார்.