மலேசியா ஜன நாயக நாடு என நமது தலைவர்களும் மக்களும்  மார் தட்டிக் கொண்டாலும் உண்மையில் அதைக் கடைபிடிக்க தவறி விட்டனர் என்றுத்தான் சொல்லவேண்டும்.

ஹிண்ட்ராப் இண்டர்லோக் எதிராக ஞாயிற்றுக் கிழமை பேரணி நடத்தக் கூடாது எனவும் அதன் மீது போலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்  துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகதீன் யாசின்.

இவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். மலேசியா ஜனநாயக நாடு. நமக்கு பேசும் சுதந்திரம் உள்ளது. அப்படி இருந்தும் ஹிண்ட்ராப்பை பேரணி நடத்தக் கூடாது என சொல்லும் அரசாங்கத்தை பார்த்தல் அவர்கள் நமது அடிப்படை உரிமையில் ஒன்றான போசும் உரிமையை பறிக்கின்றனர் என அவர் மேலும் விவரித்தார்.

அவர்கள் நடத்தும்  பேரணிக்கு போலிஸ் பாதுகாப்பாக இருக்க கூறி அனுமதி கேட்டால் அதை நிராகரித்து  இஃது சட்ட விரோத பேரணி என்றும் இப்பேரணியை நடத்தினால்  சட்ட விரோத நடவடிக்கை எடுக்கப் படும் எனும் அச்சுறுத்தல் சிறிதளவும்  ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலுக்கு எதிராக நடத்தப்படும் பேரணியை எதிர்ப்பது ஒட்டு மொத்த இந்தியர்களையும்  அவர்களது உரிமைகளையும் அரசாங்கம் சேர்த்து பறிக்கின்றனர் என காட்டுகிறது . இது எங்கள் உரிமை. இப்பேரணி மலேசிய இந்திய சமுதாயத்தின் குரல். அதை நடத்த விடாமல் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கத்தது.

இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் அமைதி சாதிப்பதும் இந்தியர்களின் உணர்ச்சிகளையும் இந்தியர்களயும் அரசாங்கம் பொருட்படுத்தாலும் மதிக்காமலும்  இருப்பது வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுப் போல்  இந்தியர்களின் மனதை மேலும் மேலும் புண்படுத்துகிறது அரசாங்கம்.

ஆகவே,  இந்தியர்களின் கோபத்துக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் பேரணி நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்குவது மட்டுமில்லாமல் இண்டர்லோக்   நாவலை மீட்டுக் கொள்ளும் படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்வாதாக கூறினார் சார்ல்ஸ் சந்தியாகோ.

 

 

சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்.