மூலம் – செம்பருத்தி Wednesday, June 1, 2011

கிள்ளான் – கட்டண வீதத்தை அமலாக்கு முறைக்கு கொண்டு வருவதற்கு முன்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக்கொண்டார்.

அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். முதலாவது, மின்துறைக்கான இயற்கை எரிவாயுவின் உற்பத்திக்காக 190 பில்லியன் வெள்ளி அதாவது ஒரு வருட உதவிப் பணத் தொகை நியாயமில்லாத ஒன்று என தாம் கருதுவதாக சார்ல்ஸ் கூறினார்.

இரண்டாவதாக, வருட கட்டணமாக தனியார் துறைக்கு 20- 22 விழுக்காடு முதலீடு, நல்ல ஒரு இலாபத்தை அழிக்கின்றது; அதை ஆராய வேண்டும் என்ற சார்ல்ஸ், எவ்வளவுத்தான் பெரிய அளவில் தனியார் துறை இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்தாலும், தற்போதைய கால சூழ்நிலைக்கும் நாட்டின் தேவைக்கும் ஏற்ப 40 % மேல் தேவையற்ற அளவே ஆகும் என கூறினார்

அந்த 20- 22 விழுக்காடு ஆதாயம் பெற வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் முக்கியமாக குறிப்பிடப் பட்டுள்ளத்தால் அதன் ஆதாயத்தைப் பெறுவதற்காக மின் உற்பத்தியை வீணே செலவழிப்பது மட்டுமில்லாமல் அதன் சுமையை மக்கள் மீது சுமக்க பார்ப்பது நியாயமற்றதொன்று என சார்ல்ஸ் சொன்னார்.

மூன்றாவதாக ஒப்பந்தங்களை பரிசீலனை செய்தாக வேண்டும். தேவையான அளவு சக்திகளை மட்டுமே நாடு பெறவேண்டும் என கருத்து தெரிவித்த சார்ல்ஸ். மின் சக்தி மேலும் தனியார்மயப் படுத்தும் முயற்சி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அரசாங்கத்திடம் பணம் இல்லை என மக்களை ஏமாற்றி அரசாங்கம் சுமக்க வேண்டிய பணச் சுமையை, உதவிப் பணத் தொகையை கட்டுப்படுத்தி அந்த பணச் சுமையை பாமர மக்கள் முதுகில் சுமத்தி தனியார் மையங்களையும் தங்களையும் பணக்காரர்களாய் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் என அவர் குற்றசாட்டினார்.

இதை தவிர்க்க வேண்டுமானால் மேல் கூறப்பட்ட , அந்த மூன்று விஷயங்களையும் அரசாங்கம் பரிசீலனை செய்யத் தயாரானால், நாம் நமது பணத்தை சேமிக்க முடியும், ஏனெனில் கட்டண வீதத்தை அவர்கள் ஏற்றவே தேவையில்லை.

ஆகவே, இது ஒரு நியாயமில்ல ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களையும் அரசாங்கத்தையும் மேலும் பணக்காரர்களாக்க ஏதுவாக இருக்கும். ஆனால் அதன் சுமையை ஏழை மக்களும் வறுமையில் வாடும் மக்களும் சுமக்க நேரிடும். ஆகையால் இந்த அமல் முறையை மறு பரிசீலனை செய்தாக வேண்டும் என சார்ல்ஸ் சந்தியாகோ அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.