மூலம் :- மலேசியா இன்று

18 May | செய்தி.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (சுயேச்சை வாணிப ஒப்பந்தம்) கீழ் தனிபட்ட உட்பிரிவு தரவு கையொப்பமிடப்பட்டால், அசல் மருந்தின் வடிவமைப்பு உரிமை நீடிக்கப்படலாம் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ எச்சரித்தார்.

அந்த ஒப்பந்தத்தின் மூலம், அசல் மருந்துகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களைப்போல், பொதுவான மருந்துகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும் அதே அளவிலான சோதனைகளும் ஆய்வுகளும் செய்வதற்கான கட்டாயச் சூழ்நிலை உருவாகும்.

இதனால் விலை அதிகமாக உயர்வு காணக்கூடும். அதன் சுமையைப் பயனீட்டாளர்களே சுமக்க வேண்டியிருக்கும் என சார்ல்ஸ் கூறினார்.

இது எச்.ஐ.வி நோயாளிகளும் மன நோயாளிகளும் தொடர்ந்து மருந்துகளைப் பெற பெரும் அவதிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், அரசாங்கம் தனியார் நிருவனங்ககளை எந்த கொள்கைகளின் மூலமும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. ஏனெனில், அரசாங்கம் தனியார் நிருவனங்களிடமிருந்து பெறும் ஆதாயத்தின் காரணமாக ஒத்துப்போக வேண்டியுள்ளதை சார்ல்ஸ் நினைவுறுத்தினார்.

எடுத்துக்காட்டிற்கு, புகைப் பிடிப்பதை எதிர்க்கும் அரசாங்கம் சிகரட் பிடிக்கும் அபாயகரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிகரட் பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கும் சுகாதார எச்சரிக்கையை நீக்கக்கூடும் என சார்ல்ஸ் கூறினார்.

சுயேச்சை வாணிப ஒப்பந்தம் ஏற்பட்டால்,  சிகரெட்டுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தை நீதிமன்றத்திக்கு இழுத்து அரசாங்கம் அவர்களது வியாபாரத்தைக் கெடுக்கின்றது என வழக்கு தொடுக்க முடியும். இது வெறும் வார்த்தை அல்ல, கடுமையான விசயம் என்றாரவர்.

இது பராகுவே நாட்டில் நடந்த உண்மையாகும்.  சிகரெட் உற்பத்தியாளரான பிலிப்ஸ் மொரிஸ், சிகரெட் பெட்டியில் சுகாதார எச்சரிக்கை வெளியிட்டதற்காக வழக்கு தொடுத்துள்ளது.

சுருங்கமாகச் சொன்னால், நாடு தனியார் துறையினால் மிக மோசமாகிக்கொண்டு போகிறது. இவ்வாறு மக்களின் நலனையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் ஒப்பந்தங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.