அண்மையில் தேசிய பதிவு இலாகா மை டப் தார் மூலம் பதிந்த அனைவருக்கும் பிறப்பு பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை கிடைக்கும் என கூற முடியாது எனவும்  அவ்விண்ணப்பங்கள் பொது விதிமுறைகளும் நிபந்தனைகளும் உட்பட்டே பரிசிளிக்கப் படும்  எனவும்  அறிவித்துள்ளது. அதேவேளையில் , தகுந்த ஆவணகளை சமர்பித்த மக்களின் விண்ணபங்கள்  கூடிய விரைவில் பரீசீலனைக்கப்படும் என உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

அப்படியானால், அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? இந்த ஏழு நாள் பதிவுகள் எதற்காக? என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ் சந்தியாகோ.

தனக்கு பிறப்பு பத்திரம் வேண்டும் ; அடையாள அட்டை வேண்டும்; குடியுரிமை வேண்டும் எனும் ஆவலால் பதிந்த இம்மக்களுக்கு மறுபடியும் ஏமாற்றமா? மலேசியாவில் பிறந்தும் அதற்கான ஆவணங்கள் இருந்தும்  பிரஜா உரிமை பெறவும் பத்திரங்கள் பெறவும் நம் மக்கள் பல ஆண்டுகள் தவம் கிடக்க வேண்டியுள்ளது.

ஆராம்பத்தில் இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கவே ”மை டாப்தார் ” ஏற்பாடு செய்துள்ளதாகவும் தலை தூக்கி நிற்கும் இந்தியர்களின்  பிரச்சனையை தீர்க்க இது ஏதுவாக இருக்கும்  என்ற அரசாங்கத்தின் உறுதிகள் இப்போது  என்னவாயிற்று?

முறையான ஆவணங்கள் இருந்தும் நமது  மக்கள் இப்பிரச்னையால் வாடுகிறார்கள். அப்படியானால் ஆவணங்கள் இல்லாதவரின் கதி என்னவோ? மலேசியாவில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆவணங்கள் இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசாங்கம் உதவ முன் வராதா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் இந்திய சமுதாயம் எதிநோக்கும் பிரச்சனையை அறியும். குடியுரிமையும் தகுந்த பத்திரங்களும் இல்லாமல் பல வசதிகளையும் உதவிகளையும் இந்தியர்கள் இழந்து வருகின்றனர்.

ஆகவே, அவர்களின் பிரச்சனையை முக்கியாமாக பிறப்பு பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமைப் பிரச்சனையை  எந்தவொரு சாக்கு போக்கு சொல்லாமல் மிக விரைவில்  தீர்க்க அரசாங்கம் ஆயுத்தமாக வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்.